தமிழக முன்னேற்றக் கழகம் மாவட்டம் தோறும், தொகுதி தோறும், ஊராட்சி மற்றும் நகர்ப்புறங்களிலும் உறுதியான அமைப்புகளை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு நிர்வாகியும் மக்கள் நலன் சார்ந்த பணிகளை நேரடியாகச் செய்து காட்ட வேண்டும் என்பது கட்டாயப் பொறுப்பாகும்.
மக்களின் தேவைகள் நேரடியாக தலைமைக்கு சென்றடையவும், அதற்கான தீர்வுகள் உடனே கிடைக்கவும் தொழில்நுட்ப அடிப்படையிலான தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கழகம் தொழில்நுட்பத்தின் வலிமையையும், மக்களின் நம்பிக்கையையும் இணைத்து ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது. “அதிகாரத்துக்காக அல்ல – மாற்றத்துக்காக” என்ற கோட்பாட்டில் தான் இக்கழகம் இயங்குகிறது.
